திரும்பி வந்தான், திரும்பி வந்தான், நீயும் வா!

திரும்பி வந்தான், திரும்பி வந்தான், நீயும் வா!
திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வா
மனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமே
பரலோகில் கோலாகலம் என்றுமே!

1. போகும்போது இன்பம்தான் அவனிலே
தகப்பன் சொத்து பாதி அவன் கையிலே
கனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலே
அனுபவித்தான் தடையின்றி வாழ்விலே – திரும்பி

2. சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலே
தகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமே
மனம்போன போக்கெல்லாம் போகவே
மீண்டும் வர மனமில்லை அவனிலே – திரும்பி

3. திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவே
தேசத்திலே பஞ்சநிலை பெருகவே
பசி தீர தவிடுகூட இல்லையே
பிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான் மனதிலே – திரும்பி

4. வீடு நோக்கி வாழ வந்த மகனையே
காத்திருந்த தகப்பன் கண்டான் தொலைவிலே
ஓடிவந்து தழுவிக் கொண்டான் நெஞ்சிலே
உணர்ச்சி பொங்க மகிழ்ந்திருந்தான் முடிவிலே – திரும்பி



thirumbi vanththan, thirumbi vanththan, neeyum va!

thirumbi vanththan, thirumbi vanththan, neeyum va!
thiral pavam sumanththalum neeyum va
mananththirumbum oru pavi nimithdhame
paralokil kolakalam endrume!

1. pokumpothu inpamthan avanile
dhakabpan soththu pathi avan kaiyile
kanavil kanta vazhvellam viraivile
anupaviththan dhadaiyinri vazhvile – thirumbi

2. sonthdham panthdham viddus sendran uutrile
dhakabpan veettai maranththu sendran thurame
manampona pokkellam pokave
meendum vara manamillai avanile – thirumbi

3. thiral soththum kaiyaivittu oodave
thesaththile panjcha nilai perukave
pasi dheera dhavidukuta illaiye
biranthdha vettai ninaiththub parththan manathile – thirumbi

4. veedu nokki vazha vanthdha makanaiye
kaththirunthdha dhakabpan kandan tholaivile
oodivanththu dhazhuvik kondan nenjsile
unarchi pongka makizhnththirunththan mudivile – thirumbi